வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி
[2026-04-21 19:23:15] Views:[107]
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K நவரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
யாழ்ப்பாண மாவட்டப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதியாகப் பதவியேற்றதன் பின்னர், ஆளுநருடனான முதலாவது சம்பிரதாயபூர்வ சந்திப்பாக இது அமைந்திருந்தது.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் K.J.N.M.P.K பிரியந்த நவரத்ன, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இடையிலான சந்திப்பொன்று மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் நடைப்பெற்றது.
இக் கலந்துரையாடலில் 51 ஆவது பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் M.R. ராசிக், பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தினைச் சேர்ந்த பிரிகேடியர் ரூவான் பெர்ணாண்டோ, லெப்டினன்ட் கேணல் சமிந்த கருணாதிலக ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.










