இன்று இலங்கை வரும் கச்சா எண்ணெய் கப்பல்..!!
[2026-04-26 12:20:09] Views:[99]
மசகு எண்ணெய் கப்பல் ஒன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கப்பலின் மூலம் 90,000 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் நாட்டை வந்தடையவுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், இலங்கைக்கு வருகை தரும் இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் இதுவாகும்.
இதன்படி, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு, இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் மேலாண் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார் குறிப்பிட்டுள்ளார்.










