yarlathirady.com

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா விளக்கமறியலில்..!

[2026-04-28 19:35:27] Views:[121]

பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைதான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்வரும் 29ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு.

யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்றின் உரிமை தொடர்பாக மல்லாகம் வழக்கு இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அந்த காணியில் வளர்ந்துள்ள புதர்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா மேற்கொண்டார்.

இதன்போது தமது காணியின் வேலியானது சேதப்படுத்தப்பட்டதாக வழக்கு இடம்பெற்று வரும் பெண்ணும் அவரது உறவினர்களும் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா திடீரென அந்த பெண் மீதும், அவரது சகோதரன் மீதும் காலால் தாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்பாதுகாப்புக்காக அந்த பெண் கல்லினால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது கை துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை நோக்கி உன்னை கொலை செயாவேன் என்று அச்சுறுத்தியுள்ளார் என கூறப்படுகிறது.

பின்னர் அங்கு வந்த இளவாலை பொலிஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தினர். அதன்பின்னர் அருச்சுனா இளவாலை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டின் பிரகாரம் அந்த பெண் இளவாலை பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவரை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை அருச்சுனா அவர்கள் கொலை அச்சுறுத்தல் விடுக்கும் காணொளியானது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்றையதினம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.

அந்தவகையில் இளவாலை பொலிஸார் அவரை துப்பாகியுடன் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர். இந்நிலையில் அவரை 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.