யாழில் ஜனாதிபதி அடிக்கல் நாட்டிய வீடு கையளிப்பு
[2026-04-29 17:10:06] Views:[103]
யாழ்ப்பாணம் - தென்மராட்சி மீசாலை கிழக்கு பிரதேசத்தில் ஜனாதிபதியால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடுகல் உரிமையாளர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
2026.01.19 ஆம் திகதி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில், இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க, 30 வீட்டுத் திட்டங்களுக்கான காசோலைகளை வழங்கி வைத்தார்.
அந்த வருகையின்போது மீசாலை கிழக்கில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான குறித்த வீட்டிற்கான அடிக்கல்லையும் நாட்டிவைத்திருந்தார்.
இந்த நிலையில், நேற்றையதினம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் ஆகியோர் புதிய வீட்டை பயனாளிகளிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தனர்.










