யாழ்ப்பாணத்தை உலுக்கிய சம்பவம்: தொலைபேசிக்கு அடிமையான மாணவனுக்கு நேர்ந்த கதி..!
[2026-04-30 22:45:11] Views:[95]
யாழில் மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது அவரது குடும்பத்தை மட்டுமல்லாது முழு யாழ்ப்பாணத்தையுமே பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பழை - வீமன்காமம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.
இவ்வாறான சூழ்நிலையில் குறித்த மாணவன் தொலைபேசி விளையாட்டிற்கு அடிமையான நிலையில் இன்று அதிகாலை தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக கூறப்படுகிறது.










