அர்ச்சுனா இராமநாதன் கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது - மணிவண்ணன்.
[2026-04-30 22:46:48] Views:[99]
குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கி காட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணையில் ,அருச்சுனா இராமநாதனுடன் முரண்பட்ட தரப்பினர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்தார்.
வழக்கு விசாரணை முடிவடைந்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு எதிராக பல்வேறு குற்றவியல் வழக்கு விசாரணைகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதனால், அவர் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதியினை வழங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.










