யாழில் 19 வயது யுவதிக்கு நேர்ந்த துயரம்..!!
[2026-05-03 23:30:02] Views:[81]
நேற்று ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றையதினம் தவறி கிணற்றினுள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.










