யாழில் சோகம்: நபர் ஒருவர் போத்தலால் அடித்து கொலை..!!
[2026-05-04 22:40:13] Views:[152]
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலை யில் முடிவடைந்துள்ளது.
சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குருநகர் புதுமைமாத தேவாலயத்திற்கு அருகில் நண்பர்கள் இருவர் ஒன்றாக இருந்து மது அருந்தியுள்ளனர். அதன் போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், திடீரென ஒருவர் மற்றையவர் மீது மது போத்தலால் தலையில் பலமாக தாக்கியுள்ளார்.
அதில் தலையில் படுகாயமடைந்த நபர் அங்கிருந்து மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.










