யாழில் முதிரைமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது..!
[2026-05-05 21:19:52] Views:[162]
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரைமரக்குற்றிகளை சட்டவிரோதமாக ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இன்று காலை மீசாலை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்த போது 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளுடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.










