யாழில் கோர விபத்து - இரு இளைஞர்கள் பலி..!!
[2026-05-05 21:37:51] Views:[174]
யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்திக்கும் பிரதேச செயலகத்திற்கும் இடையில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் கரவெட்டி வடக்கைச் சேர்ந்த 22, 24 வயதுடைய இருவரே உயிரிழந்தனர்.
மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடு ஒன்றின் மதிலுடன் மோதி இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இரண்டு இளைஞர்களும், படு காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.










