யாழ். மாநகர சபைக்கு புதிய ஆணையாளராக அரவிந்தராஜ் நியமனம்
[2026-05-20 22:11:32] Views:[88]
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யா ஆளுநர் செயலகத்தில் ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது.










