அம்மாச்சி உணவகத்திற்கு பூட்டு...!!!
[2026-05-22 17:50:46] Views:[112]
சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வந்ததாக திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகம் பொது சுகாதார பரிசோதகரினால் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அம்மாச்சி உணவகம் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாக, பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், அம்மாச்சியில் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த வேளை, ஏற்கனவே இனம் காணப்பட்ட சுகாதார பிரச்சனைகள் தொடர்பிலான அறிவுறுத்தல்களை மீறி உணவகம் தொடர்ந்து இயங்கி வந்தமையால், குறித்த பிரச்சனைகளை சீர் செய்யும் வரையில் உணவகத்தை மூட பணித்துள்ளதாக கூறப்படுகிறது.










