yarlathirady.com

'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

[2026-05-28 22:24:36] Views:[83]

'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, காரைநகர் மற்றும் வேலணை ஆகிய தீவகப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை வேலணை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.

'நெடுந்தாரகை' மற்றும் 'வடதாரகை' ஆகிய இரு பயணிகள் படகுகளும் திருத்தப் பணிகள் நிறைவடைந்து அடுத்த மாதம் நடுப்பகுதியில் மீண்டும் சேவைக்குத் தயாராகும் என வட பிராந்தியக் கடற்படைத் தளபதியால் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை குறித்த கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர், காங்கேசன்துறை கடற்படை இறங்கு துறையில், கடற்படையினரால் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும் நெடுந்தாரகை படகினை கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
வெளியானது சர்தார்-2 திரைப்படத்தின் அப்டேட்
2026-05-26 11:33:17
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் கார்த்தி, தனது இயல்பான நடிப்பு மற்றும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் தனித்த இடத்தைப் பிடித்துள்ளார்.