அரச அலுவலகங்களில் இன்று முதல் இதை பயன்படுத்த தடையாம்
[2026-05-31 22:48:10] Views:[86]
இன்று முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் , ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை பயன்படுத்த தடைவிதிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேட்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான சுற்றறிக்கை பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் பாரிய கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் அரச நிறுவனங்களுக்குத் தேவையெனின் கொள்வனவு செய்ய முடியும் என ஊடகமொன்றுக்கு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.










