காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்
[2026-06-02 22:27:55] Views:[63]
காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டிருந்த சிவகங்கை கப்பலானது பழுதடைந்த நிலையில் போக்குவரத்து சேவையானது இடைநிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த கப்பல் போக்குவரத்தானது மீண்டும் நாளைய தினம் முதல் சேவையில் ஈடுபடும் எனவும் வழமை போல் செவ்வாய் தவிர்ந்த ஏனைய ஆறு நாட்களும் சேவையில் ஈடுபடும் எனவும் அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே www.sailsubham.com என்ற இணைத்தளத்திற்குள் பிரவேசிப்பதனூடாகவோ அல்லது 0212224647மற்றும் 0117642117 என்ற இலக்கங்களுக்கு அழைப்பு மேற்கொள்வதன் மூலமாகவோ பயணச்சீட்டுகளை பதிவுசெய்துகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










