yarlathirady.com

சூட்சுமமான முறையில் மறைத்து கடத்திவரப்பட்ட பொருள்: சாரதி கைது..!!

[2026-06-16 11:20:09] Views:[49]

கிளிநொச்சியில் இருந்து தென்னம் மட்டைகளுக்குள் மறைத்து சட்டவிரோதமான முறையில் மணலை கடத்தி வந்த வாகன சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பளை பகுதியில் இருந்து தென்னம் மட்டைகளை ஏற்றி செல்வது போன்று, வாகனத்தில் அனுமதி பத்திரமின்றி மணலை ஏற்றி அதன் மேல் தென்னம் மட்டைகளை பரவி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதிக்கு நபர் ஒருவர் நீண்ட காலமாக கடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை குறித்த வாகனத்தை வழிமறித்து சோதனை செய்த போது தென்னம் மட்டைகளுக்குள் மணலை கடத்தி சென்றமை கண்டறியப்பட்ட நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்தனர்.

அதனை அடுத்து மணல் கடத்த பயன்படுத்திய வாகனத்தையும் கைப்பற்றி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு, சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக கூறப்படுகிறது.


சினிமாசெய்திகள்
‘ஜெயிலர் 2’ வெளியீட்டில் அதிரடி மாற்றம்.!
2026-06-18 22:37:08
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது.
விக்ரமின் புதிய முயற்சி: 'சியான் 63'
2026-06-15 19:17:49
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடலையும், தோற்றத்தையும் முழுமையாக மாற்றிக்கொள்ளும் நடிகர்களில் முதன்மையானவர் விக்ரம்.
ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!!
2026-06-12 11:17:42
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைச் சுற்றி நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் அரசியல் களத்தில் களமிறங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு அவர் தெளிவான விளக்கம் வழங்கியுள்ளார்.
இயக்குனர்களின் இமயம் பாரதிராஜா காலமானார்..!!
2026-06-10 21:59:49
தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மூத்த இயக்குநரான 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் களமிறங்கும் Ice Age
2026-06-05 22:42:22
உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்த அனிமேஷன் திரைப்பட வரிசையான Ice Age மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகியுள்ளது.
'பிளாஸ்ட்' படம் எப்படி இருக்கு..?
2026-06-04 19:33:51
தமிழ் திரையுலகின் ஆக்‌ஷன் கிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அர்ஜுனின் 'பிளாஸ்ட்' திரைப்படம், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.