ஆசிய மட்ட போட்டியில் சாதனை படைத்த யாழ். இளைஞன் !
[2023-12-19 12:16:47] Views:[16]
மலேசியாவில் இடம்பெற்றுவரும் ஆசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் இலங்கை அணி சார்பாக கலந்து கொண்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த ச.புசாந்தன் என்ற இளைஞன் சாதனை படைத்துள்ளார்.
ஆசிய கிளாசிக் பவர்லிஃப்டிங் சாம்பியன்ஷிப் - 2023 போட்டிகள் கடந்த 10ம் திகதி மலேசியாவின் ஜோகூர் பாருவில் ஆரம்பமாகியது.
இந்நிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற ஆசிய கிளாசிக் பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த இளைஞனான சற்குணராசா புசாந்தன் இரண்டு வெள்ளி பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த போட்டியில் கலந்துகொண்டு இலங்கைக்கு பெருமை சேர்த்த புசாந்தனுக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தகது.










