yarlathirady.com

IPL வரலாற்றில் புதிய சாதனை படைத்த தோனி!

[2024-03-29 21:58:04] Views:[17]

IPL வரலாற்றில் இதுவரை அதிக முறை ரன் அவுட் செய்த வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி புதிய சாதனை படைத்துள்ளார். 2008ஆம் ஆண்டு IPL தொடர் ஆரம்பித்தது முதல் கடந்த சீசன் வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகவும், நடைபெற்று வரும் 17வது சீசனில் CSK வீரராகவும் தோனி விளையாடி வருகிறார்.

இதுவரையில் 251 போட்டிகளில் விளையாடிய தோனி 42 முறை ஸ்டம்பிங் முறையில் வீரர்களை ஆட்டமிழக்க செய்துள்ளார். இறுதி ஆட்டத்தில் பிடித்த 2 கேட்சுகளையும் சேர்த்து மொத்தம் 144 கேட்சுகளை பிடித்துள்ளார். மற்றும் IPL வரலாற்றில் அதிகமுறை ரன்அவுட் செய்து வீரர்களை ஆட்டமிழக்க செய்த வீரராக தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதற்கு அடுத்த இடத்தில் சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா 23 ரன்அவுட்களுடன் 2 ஆம் இடத்தில் உள்ளார். 3ஆம் இடத்தில் பெங்களூரு அணி நட்சத்திர வீரர் விராட் கோலி 19 ரன் அவுட்களை நிகழ்த்தியுள்ளார். 4ஆம் இடத்தில் மணீஷ் பாண்டே மற்றும் CSK முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தலா 16 ரன்அவுட்களை நிகழ்த்தியுள்ளனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.