yarlathirady.com

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.

[2024-04-07 11:29:17] Views:[13]

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் கோப்பை போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. குறிப்பாக போட்டியை நடத்தும் நாடாக இலங்கை இருப்பதால் இந்த வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணகோப்பை இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கையில் நடத்த ஐசிசி தீர்மானித்துள்ளது. எனவே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண கோப்பை போட்டித் தொடருக்கு இலங்கையும் இந்தியாவும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மேலும் 2026 T20 உலகக்கிண்ண கோப்பை தொடரில் 20 அணிகள் பங்குபெறவுள்ள நிலையில், போட்டித் தொடருக்கு 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன என்பது குறிப்படத்தக்க விடயமாகும்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.