yarlathirady.com

அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் புதிய ஹட்ரிக் சாதனை..!

[2024-06-23 11:46:39] Views:[14]

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி ஹட்ரிக் சாதனையை படைத்துள்ளார்.

T20 உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலேயே அவர் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

போட்டியில் தனது மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷித் கானை ஆட்டமிழக்கச் செய்த கம்மின்ஸ் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் கரீம் ஜனத் மற்றும் குல்பாடின் நைப் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.

அண்மையில் பங்காளதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலும் பெட் கம்மின்ஸ் தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை பெற்றுள்ளார்.

இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 8 ஹட்ரிக் பதிவாகியுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு இலங்கைக்காக வனிந்து ஹசரங்க இந்த சாதனையை நிகழ்த்தினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலேயே அவர் இந்த ஹட்ரிக்கை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.