yarlathirady.com

நேற்றுடன் நிறைவடைந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்..!!!

[2024-08-12 07:18:33] Views:[12]

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கோலாகலமாக தொடங்கி 15 நாட்களுக்கு மேல் நடைபெற்ற நிலையில் நேற்றுடன் (11) நிறைவடைந்துள்ளது.

இந்த போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதன் தொடக்க விழா அணிவகுப்பு அங்குள்ள சென் நதியில் அரங்கேறியதுடன், படகுகள் மூலம் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளும் அணி வகுத்தனர்.

இறுதி நாளான நேற்று தடகளம், கூடைப்பந்து, கரப்பந்தாட்டம், மல்யுத்தம் உட்பட 9 விளையாட்டுகளில் 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

போட்டிகள் முடிவடைந்ததும் நிறைவு விழா 80 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட ஸ்டேட் டீ பிரான்ஸ் மைதானத்தில் இலங்கை நேரப்படி நள்ளிரவு 12:30 மணிக்கு ஆரம்பமாகியது.

முடிவில் அடுத்த (2028) ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா) நகர மேயரிடம் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கொடி இறக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது

இதன்போது அமெரிக்க நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அமெரிக்க நாட்டு குழுவினர் இசை நிகழ்ச்சியும் சில நிமிடங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.