முதல் நாளிலேயே கோடிகளை அள்ளிய கோட் படம்...!!
[2024-09-06 21:47:15] Views:[13]
இளைய தளபதி விஜய் அரசியலுக்கு நுழைந்த பின்பு முதன்முதலாக வெளியான திரைப்படம் தான் கோட். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தனது 69 ஆவது படத்துடன் தான் சினிமா துறையில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதன் காரணத்தினால் கோட் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது.
இவ்வாறு கோட் படம் உலக அளவில் சுமார் 5000 திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்களும் அதிகளவானோர் பாசிட்டிவ் விமர்சனங்களை தான் அளித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், கோட் திரைப்படம் முதல் நாளிலேயே 126.32 கோடிகளை வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










