yarlathirady.com

யாழ்ப்பாணத்து நடிகையின் நடிப்பில் வெளிவரவுள்ள இந்திய திரைப்படம்.

[2025-01-05 10:42:10] Views:[14]

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜனனி பிரபல தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபல்யமாகியிருந்தார். அதுமட்டுமல்லால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ஊடாக சினிமாவில் ஜனனி அறிமுகமாகியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் DJ.அருணாச்சலம் நடித்துள்ள உசுரே படத்தின் நடிகை ஜனனி நாயகியாக நடித்துள்ளார்.

பாடராக இருந்து அசுரன் படத்தில் நடிகராக அறிமுகமானவர் DJ.அருணாச்சலம் தனது சிறப்பான நடிப்புக்காக வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில் தற்போது, அறிமுக இயக்குநர் நவீன் டி கோபால் இயக்கியுள்ள உசுரே படத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ கிருஷ்ணா புரடகஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகை ஜனனி நாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனராஜ் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.