yarlathirady.com

IPL 2025 போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு !

[2025-02-20 21:27:32] Views:[12]

IPL 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் IPL தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் என மொத்தம் 10 அணிகள் மோதவுள்ளன.

முதல் போட்டியில் நடப்பு ஐபிஎல் தொடரின் கடந்த முறை செம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும பெங்களூரு அணி உடன் மோத உள்ளது.

இந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. அதே போன்று முதல் சுற்று ஐதராபாத் மைதானத்திலும் இறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது.

சி.எஸ்.கே அணியின் முதல் போட்டி மார்ச் 23ஆம் திகதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது.

இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே போன்று ஆர்சிபி அணி உடனும், மும்பை அணியுடனும் சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் விளையாட உள்ளது.

தகுதிகாண் சுற்று 1 போட்டி மே 20 ஆம் திகதியும் எலிமினேட்டர் போட்டி மே 21 ஆம் திகதியும் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

தகுதிகாண் சுற்று 2 போட்டி மே 23 ஆம் திகதியும் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் திகதியும் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே 2025 IPL கோப்பை ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் முன்பு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.