இலங்கை வரும் இந்திய கிரிக்கெட் அணி: இந்திய அணியில் எற்படவுள்ள மாற்றம்...!!
[2025-07-16 14:57:28] Views:[15]
2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் இந்திய கிரிக்கட் அணி இலங்கையில் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் இரண்டு அணிகளும் பங்கேற்கவுள்ளன.
மற்றும் ரோஹித் சர்மா அவர்கள் ஏற்கனவே இருபதுக்கு இருபது மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். எனவே சர்வதேச கிரிக்கட்டில் தொடர்ந்து விளையாடும் ஒரு வீரரிடம் தலைமைப்பதவியை ஒப்படைக்க அணி நிர்வாகம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, ரோஹித் ஒருநாள் தலைமையில் இருந்து நீக்கப்பட்டு, சுப்மன் கில் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. எனினும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெறுவார்கள்.










