2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் சேர்ப்பு..!
[2025-07-22 22:11:45] Views:[19]
லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு மீண்டும் அரங்கேற்றப்பட உள்ளது. இந்த ஒலிம்பிக்கிற்கான கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
1900 பாஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு 128 ஆண்டுகளுக்கு பின்னர் கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கில்! லோஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகளில் T20 வடிவத்தில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக்-2028இல் கிரிக்கெட் போட்டிகள் ஜூலை 12ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் போட்டிகளும் லோஸ் ஏஞ்சல்ஸில் இருந்து சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொமோனாவின் ஃபேர்லேக்கில் கட்டப்பட்ட தற்காலிக மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.










