yarlathirady.com

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் காலமானார்..!

[2025-07-25 09:36:19] Views:[20]

பிரபல WWE மல்யுத்த வீரரான ஹல்க் ஹோகன் தனது 71 வயதில் மாரடைப்பு காரணமாக காலமானார். மல்யுத்த போட்டியின் முடி சூடா மன்னனாக ஒரு காலத்தில் விளங்கிய ஹல்க் ஹோகன் WWE நிறுவனம் இன்று மாபெரும் சாம்பிராஜ்யத்தை படைத்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளார்.

ஹல்க் ஹோகன் தன்னுடைய 71 வது வயதில் ஃப்ளோரிடாவில் உள்ள தனது வீட்டில் மயங்கி கிடந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதே அவருடைய உயிர் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஹல்க் ஹோகனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருடைய உயிர் பிரிந்ததாக முதல் கட்ட செய்திகள் வெளியாகி உள்ளது.

ஹல்க் ஹோகன் உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கின்றது. ஹல்க் ஹோகனின் இந்த திடீர் மறைவுக்கு ஒட்டுமொத்த ரசிகர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.