yarlathirady.com

வெளியானது ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகத்தின் ட்ரெய்லர்..!

[2025-07-29 11:33:21] Views:[15]

வசூலை அள்ளிக் குவித்த ‘அவதார்’ தொடரின் மூன்றாவது பாகமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ ‘Avatar: Fire and Ash’வருகின்ற டிசம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

‘அவதார்’ படத் தொடர் உலக சினிமாவின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. முதல் பாகம், ஜெயம்ஸ் கேமரூன் இயக்கத்தில், உலகளாவிய வசூலில் புதிய சாதனை படைத்தது.

2022-ல் வெளியான வெளியான இரண்டாவது பாகமான ‘Avatar: The Way of Water’ மீண்டும் அந்த சாதனையைத் தொடர்ந்தது.

இப்போது, ரசிகர்களுக்காக வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் மூன்றாவது பாகம் புதிய வரலாற்றை எழுதவிருக்கிறது. இயக்குநர் ஜெயம்ஸ் கேமரூன் தலைமையிலான அதே குழுவால் உருவாகி வருகிற மூன்றாவது பாகத்தின் படப்பிடிப்பு இரண்டாம் பாகத்துடன் சேர்த்து மேற்கொள்ளப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.