பிரம்மாண்டமாக உருவாகும் படம்
[2025-08-20 12:27:53] Views:[16]
விக்ரம், மாநகரம், கைதி, மாஸ்டர், லியோ படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தைதான் இயக்கப்போகிறார் என ஏற்கனவே அவரே பேட்டியில் கூறியிருந்தார். ஆனால், தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினி - கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போகிறாராம். இப்படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்போவதாக தகவல் கூறப்படுகிறது..










