yarlathirady.com

இந்த மாதம் வெளியாக உள்ள சிறப்பு திரைப்படங்கள்.

[2025-09-02 19:11:44] Views:[15]

செப்டெம்பர் மாதம் பல்வேறு சமூகக் கருத்துகளை உள்ளடக்கிய 11 திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. ஆக்‌ஷன், காதல், சமூகக் கருத்துகள், வரலாற்று பின்னணி என பல பரிமாணங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

அந்த பட்டியலில், மதராஸி, பேட் கேர்ள், காதி, காந்தி கண்ணாடி, பாம், குமார சம்பவம், கிஸ், தண்டகாரண்யம், சக்தி திருமகன், OG மற்றும் பால்டி போன்ற திரைப்படங்கள் காணப்படுகின்றன.

அந்தவகையில், செப்டெம்பர் மாதம் தமிழ் திரையுலகில் ஒரு விழாக்காலம் போலவே இருக்கின்றது. ஒவ்வொரு வாரமும் ரசிகர்களுக்கு புதிய அனுபவங்கள் காத்திருக்கின்றன. மதராஸி, OG போன்ற மெகா ரிலீஸ்கள் இருந்தாலும், தண்டகாரண்யம், காந்தி கண்ணாடி போன்ற சமூக கருத்துகள் கொண்ட படங்களும் பாராட்டதக்கவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.