yarlathirady.com

அடுத்தடுத்து வெளிவரவுள்ள கமல்ஹாசனின் அதிரடி திரைப்படங்கள்.

[2025-09-18 19:20:53] Views:[19]

தமிழ் திரையுலகில் ‘உலக நாயகன்’ என்ற பெருமையை தக்கவைத்திருக்கும் கமல் ஹாசன், தற்போது மீண்டும் திரைப்பட உலகில் பிஸியாக இருக்கிறார்.

அரசியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், சினிமா என திகழும் அவரிடம், தற்போது பல தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், பெரிய நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.அதன் சாட்சியாக, கமல் ஹாசன் கைவசம் வைத்திருக்கும் புதிய திரைப்படங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் தனித்துவமான படைப்புகளும், மாஸான திருப்பங்களும், ரீயூனியன் கூட்டணிகளும் இருக்கின்றன.

அந்தவகையில், சித்தா பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் ஒன்று. அதிரடி மாஸ்டர் அன்பறிவு இயக்கத்தில் ஒன்று. அத்துடன் RKFI மற்றும் Red Giant கூட்டணியில் சூப்பர் ஸ்டாருடன் reunion படத்திற்காகவும் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவை மூலமாக, எதிர்வரும் ஆண்டுகளில் கமல் ஹாசன் மீண்டும் தனது அசத்தலான நடிப்பை வெளிக்காட்டவுள்ளார் என்பதனை அறியமுடிகிறது.

கலையை நேசிக்கும் அரசியல் நாயகனாகவும், சிந்தனையோடும், செயற்பாடோடும் இயங்கும் நடிகராகவும் கமல் ஹாசன் தொடரும் பயணம், தற்போது புதிய இயக்குநர்கள், புதிய கூட்டணிகள், புதிய முயற்சிகள் மூலம் மேலும் விரிவடையவுள்ளது.


சினிமாசெய்திகள்
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.
சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்ட டிமான்ட்டி காலனி 3
2026-04-04 22:22:33
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியான “டிமான்ட்டி காலனி” திரைப்படம் ஹாரர் திரில்லர் வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியை தொடர்ந்து உருவான “டிமான்ட்டி காலனி 2” உலகளவில் சுமார் 80 கோடி ரூபாய் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
4000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ராமாயணா..!!
2026-04-02 19:24:55
நமித் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ராமாயணா. இப்படத்தில் ராமராக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யாஷ் நடிக்கிறார்கள்.