உலகளவில் காந்தாரா சாப்டர் 1 செய்துள்ள வசூல் இத்தனை கோடியா...!!
[2025-10-10 14:46:53] Views:[12]
கடந்த வாரம் வெளிவந்த பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளி வந்த படம் தான் காந்தாரா சாப்டர் 1 செய்துள்ள வசூல், எவ்வளவு?
2022ல் வெளிவந்த காந்தாரா மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அதனுடைய அடுத்த பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவாகி வெளிவந்துள்ளது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் இன்றுடன் 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளநிலையில், 8 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதன்படி, 8 நாட்களில் உலகளவில் ரூ.475 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.










