சாதனை படைத்த இலங்கை கால்பந்தாட்ட அணி..!
[2025-10-11 14:45:50] Views:[19]
சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் முதல் முதலாக துர்க்மேனிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாதனை படைத்துள்ளது.
A.F.C ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 2027 க்கான 3ஆம் சுற்று தகுதிகாணின் முதலாம் கட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் கடந்த வியாழக்கிழமை(09) நடைபெற்றது.
குறித்த போட்டியில் துர்க்மேனிஸ்தானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிகொண்டு சாதனை படைத்தது.
துர்க்மேனிஸ்தான் வீரர்கள் இரண்டு சந்தர்பங்களில் (58ஆவது மற்றும் 89ஆவது நிமிடங்களில்) கோல் போட எடுத்த முயற்சிகளை கோல் வாயிலில் வைத்து மிக அற்புதமாக ஜேசன் தயாபாரன் தடுத்து இலங்கையைக் காப்பாற்றி வெற்றி அடையச் செய்தார்.










